2025 ஏப்ரல் 30, புதன்கிழமை

கைதிகள் இருவர் தப்பியோட்டம்

R.Maheshwary   / 2021 செப்டெம்பர் 30 , மு.ப. 11:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

அஜித்லால் சாந்தஉதய

எம்பிலிப்பிட்டிய- கந்துருகஸார  சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதிகள் இருவர் நேற்று  (29) அங்கிருந்து தப்பியோடியுள்ளதாக  எம்பிலிப்பிட்டிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

திருட்டு சம்பவம் ஒன்று தொடர்பில், மாத்தறை நீதிமன்றில் சிறைத் தண்டனை தீர்ப்பளிக்கப்பட்ட சத்துரங்க சம்பத் என்ற 28வயது இளைஞரும் 30 மில்லிகிராம் போதைப் பொருளை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில், கொழும்பு நீதிமன்றில் விதிக்கப்பட்ட 6,000 ரூபாய் அபராதப் பணத்தை செலுத்த முடியாமல் சிறைத் தண்டனை தீர்ப்பளிக்கப்பட்ட ஆறுமுகம் ராஜேஸ் கருணானந்தன் என்ற 36 வயது நபருமே இவ்வாறு சிறையில் இருந்து தப்பியோடியுள்ளனர்.

 இவர்களை கைதுசெய்வதற்கான விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.

 

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .