Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை
Editorial / 2019 ஜனவரி 20 , மு.ப. 10:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
அங்குணகொலபெலஸ்ஸ சிறைச்சாலையில் கைதிகள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவம் தொடர்பான காணொளியை வெளியாட்களுக்கு வழங்கிய அதிகாரி யாரென்பதை கண்டுபிடித்துள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
குறித்த சிறைச்சாலையில் சீ.சீ.டீ.வி கமரா பிரிவில் கடமையாற்றும் சிறைச்சாலை காவலர் ஒருவரே இந்த காணொளிகளை வழங்கியுள்ளாரென்றும் இதற்காக அவர் ஒரு இலட்சத்துக்கும் அதிகமான பணத்தைப் பெற்றுள்ளாரென்றும் தெரியவந்துள்ளதாக, திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.
அங்குணகொலபெலஸ்ஸ சிறையில் சிறைக்கைதிகள் இரு தரப்பினருக்கிடையில் கடந்தாண்டு மே மாதம் 22ஆம் திகதி இடம்பெற்ற மோதல் சம்பவம் தொடர்பில், விசாரணைகள் செய்வதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை நாளைய தினம் சிறைச்சாலைகள் ஆணையாளரால் நீதியமைச்சர் தலதா அத்துகோரளவிடம் கையளிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
2 hours ago
2 hours ago