2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

“ கொக்குதொடுவாய் அகழ்வு பணி நிறுத்தப்படும் ”

Janu   / 2023 ஒக்டோபர் 05 , மு.ப. 10:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொக்குதொடுவாய் மனித புதைகுழி அகழ்வு பணி மீண்டும் ஆரம்பிக்கப்படாமல் நிறுத்தப்படக்கூடிய சூழலே காணப்படுவதாக சட்ட வைத்திய அதிகாரி வாசுதேவா  தெரிவித்துள்ளார்.

‘மீண்டும் அகழ்வு பணிகள் எப்போது ஆரம்பிக்கப்படும் ? ஏற்கனவே எடுக்கப்பட்ட 17 உடற்கூற்றுக்கான பரிசோதனை முடிவுகள் எப்போது கிடைக்கப் பெறும்’ என வியாழக்கிழமை (05)  முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலை சட்ட வைத்திய அதிகாரி கனகசபாபதி வாசுதேவ அவர்களை தொடர்பு கொண்டு வினவிய போது,

 முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திலுள்ள பிரதான கணக்காளர் நிதி இல்லை என புதன்கிழமை (04) கூறியுள்ளதாகவும் அகழ்வு பணி நிறுத்தப்படக்கூடிய சூழலே காணப்படுவதாகவும் , உடற்கூற்று பரிசோதனை முடிவுகளும் தாமதமாவதற்கான சாத்திக்கூறுகளே காணப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.

சன்முக  தவசீலன்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X