A.Kanagaraj / 2020 நவம்பர் 01 , மு.ப. 06:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான தமிழக வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
கொரோனா தொற்றால் நுரையீரல் கடுமையாக பாதிக்கப்பட்டு சிகிச்சைபெற்றுவந்த அமைச்சர், சிகிச்சை பலனின்றி அக்டோபர் 31ஆம் திகதி இரவு 11.15 மணியளவில் உயிரிழந்தார் என அவருக்கு சிகிச்சையளித்துவந்த காவிரி மருத்துவமனை தெரிவித்துள்ளது.
எம்.ஜி.ஆர் காலத்தில் இருந்தே கட்சிப்பணியில் திறம்பட பணியாற்றியவர் அமைச்சர் துரைகண்ணு என்றும், அவரின் மறைவு மிகுந்த வேதனை அளிப்பதாகவும் முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளதாக தமிழக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் தாயார் கடந்த 12ஆம் திகதி இரவு சேலத்தில் மரணம் அடைந்த நிலையில் அவரது இறுதி சடங்கில் கலந்துகொள்வதற்காக துரைக்கண்ணு காரில் புறப்பட்டார்.
விழுப்புரம் அருகே சென்று கொண்டிருந்தபோது அவருக்கு திடீரென உடல்நிலை மோசமடைந்தது. இதையடுத்து முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் முதலுதவி பெற்ற அவர், சென்னைக்கு கொண்டுவரப்பட்டார்.
சென்னையிலுள்ள காவிரி மருத்துவனையில் சேர்க்கப்பட்டபோது அவருக்கு மூச்சுத் திணறல் இருந்தது. இதையடுத்து அவருக்கு மேற்கொள்ளப்பட்ட சோதனையில் கொரோனோ தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .