2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

கொரோனா ஒழிப்புக்கு 500 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு

Editorial   / 2020 மார்ச் 19 , பி.ப. 03:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொரோனா வைரஸ் தொற்று ஒழிப்பு நடவடிக்கைகளுக்காக 500 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கிடப்பட்டுள்ளது.

இதற்கான நிதியை ஒதுக்கிடுவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

கொரோனா தொற்று காரணமாக பொருளாதாரத்துக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தலைக் குறைப்பதற்கான முதலீடுகளை வழங்க ஜனாதிபதி எடுத்துள்ள தீர்மானத்துக்கு அமைய அமைச்சரவை இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளது.

ஒன்றிணைந்த நிதியத்திடம் காணப்படும் நிதியை செலவிடுவதற்கான அதிகாரம் திரைசேரியின் செயலாளருக்கு வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சரவை இணைப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன குறிப்பிட்டுள்ளார்.

அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பின்போது, இன்று (19) அவர் இதனைக் கூறியுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .