Editorial / 2021 ஓகஸ்ட் 12 , பி.ப. 03:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி மரணிப்போரின் சடலங்களை, விரைவாக தகனம் செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளூராட்சி மன்றங்களின் பிரதானிகளுகு்கு ஆலோசனைகளை வழங்குமாறு, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சிமன்ற இராஜாங்க அமைச்சர் ரொஷான் ரணசிங்க, அமைச்சின் செயலாளருக்குக்கு அறிவுறுத்தியுள்ளார்.
சடலங்களை எரியூட்டும்போது ஏற்படும் பிரச்சினைகள் தொடர்பில், விசேட கவனத்தை செலுத்தியதன் பின்னரே, மேற்கண்டவாறு ஆலோசனை வழங்கியுள்ளார்.
உள்ளூராட்சிமன்றங்களின் நிர்வாகத்தின் கீழ், தற்போது 239 தகனசாலைகள் உள்ளன. சிலவற்றை இயங்க முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது. அதுதொர்பில் ஆராய்ந்து அவ்வாறான தகனசாலைகளை திருத்தி, மின்சாரம் தடைப்படும் போது, ஜெனரேட்டர்களை பயன்படுத்தும் வகையில், ஜெனரேட்டர்களை வழங்குதல், காஸ் சிலிண்டர்களை பயன்படுத்தல் மற்றும் சேவையாளர்கள் பாதுகாப்பு உடை மற்றும் உபகரணங்கள் உள்ளிட்டவை தொடர்பிலும் இராஜாங்க அமைச்சர் கவனம் செலுத்தியுள்ளார்.
1 hours ago
2 hours ago
2 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago
5 hours ago