Freelancer / 2021 ஓகஸ்ட் 24 , பி.ப. 10:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான குழந்தைகளுக்கு "சைலண்ட் ஹைபோக்ஸியா" எனப்படும் மிகவும் தீவிரமான நோய் நிலையை உருவாக்குகிறது என்று லேடி ரிட்ஜ்வே சிறுவர்கள் வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவின் பொறுப்பாளர் டொக்டர் நளின் கித்துல்வத்த தெரிவித்தார்.
கொரோனா குணமடைந்த குழந்தைகள் தங்களை அறியாமல் சாதாரண செயற்பாடு அல்லது விளையாட்டின் போது ஒட்சிசன் அளவை இழக்க நேரிடும் என்று அவர் குறிப்பிட்டார்.
இரத்தத்தில் ஒட்சிசனின் அளவு குறைவாக இருந்தாலும், மூச்சு விடுவது கடினம், பேசுவது கடினம், ஆனால் இந்த நோயில் அத்தகைய அறிகுறிகள் இல்லை என்று கிதுல்வத்த சுட்டிக்காட்டினார்.
குறைந்தது ஒரு வாரத்துக்கு ஒரு முறையாவது கொரோனா தொற்று உள்ள குழந்தைகளின் ஒட்சிசன் அளவை அளவிடுவது முக்கியம் என்று தெரிவித்தார்.
விளையாடிய பின்னர் ஒட்சிசன் அளவு 94 சதவீதத்துக்கு குறைவாகவும், சாதாரண நிலையில் 96 சதவீத்துக்கு குறைவாகவும் இருந்தால், குழந்தைகள், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு உடனடியாக சிகிச்சை அளிக்கப்பட வேண்டும் என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .