Editorial / 2021 ஜனவரி 05 , மு.ப. 12:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
உலகில் பல நாடுகள், கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசிகளைத் தமது மக்களுக்கு வழங்குவதற்காக, சுகாதார ஸ்தாபனத்தின் விதிமுறைகளுக்கு அமையச் செயற்பட்டு வருகின்றது எனத் தெரிவித்துள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க, ஆனால், எமது நாட்டில், கொரோனாவை மென்மேலும் பரப்பும் நடவடிக்கை வெற்றிகரமாக முன்னெடுக்கப்படுகிறது என்றார்.
தற்போதைய அரசாங்கம், சுற்றுலாத்துறையை ஊக்குவிப்பதாகத் தெரிவித்து, உக்ரைன் சுற்றுலாப் பயணிகளை அழைத்து வருவதன் ஊடாக, பாரிய அரச நிதியை துஸ்பிரயோகப்படுத்துவதாகத் தெரிவித்த அவர், இந்த அரசாங்கம், மக்களின் சுகாதாரத்துடன் விளையாடுகின்றது எனக் குற்றஞ்சாட்டினார்.
ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு கருத்துரைத்த அவர்,
'கொரோனாவிலிருந்து பாதுகாத்துக்கொள்வதற்கான, ஆலோசனைகளை இலங்கையின் பொலிஸ்மா அதிபர், கொரோனா ஒழிப்பு செயலணியின் பிரதானி ஆகியோர் மக்களுக்கு வழங்குகின்றனர். அவ்விருவருக்கும் எவ்விதமான தார்மிக உரிமையும் இல்லை' என்றார்.
உக்ரைன் செல்வந்த நாடென எல்லோரும் நினைக்கலாம், ஆனால், அங்கு தனிநபர் வருமானம் இலங்கையை விடக் குறைவாகும் எனத் தெரிவித்த அவர், பல பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்துக்கொண்டிருக்கும் உக்ரைனிலிருந்து சுற்றுலாப் பயணிகளை அழைத்து வந்து, எமது சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதாகத் தெரிவிப்பதானது, நகைப்புக்குரிய விடயமாகும் என்றார்.
வருகை தந்துள்ள சுற்றுலாப் பயணிகளில், கொரோனா வைரஸ் தொற்றாளர்களும் உள்ளனர். பிரித்தானியா உள்ளிட்ட நாடுகளில், தற்போது பரவி வரும் 'கொரோனா மாறி' நோயாளர்களும் இந்தச் சுற்றுலாப் பயணிகளில் உள்ளனரா என்ற கேள்விக்கு பதிலில்லை என்றார்.
அத்துடன், உக்ரைனுக்கும் இலங்கைக்கும் பல கொடுக்கல் வாங்கல்கள் உள்ளன. கடந்த காலங்களில், இலங்கையை அபகீர்த்திக்கு உள்ளாக்கிய மிக் விமானக் கொள்வனவு நிதி மோசடி, உக்ரைனில் தான் நடைபெற்றது. அந்தச் சம்பவத்தின் பிரதிவாதி, உதயங்க வீரதுங்க என்றார்.
'உக்ரைனிலிருந்து கழிவுகள் இலங்கைக்குக் கொண்டுவரப்பட்டுள்ளன. அந்தக் கழிவு கொள்கலன்களின் உரிமையாளர்கள் யார் என்பது, இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை' என்றார்.
'இலங்கையின் இரண்டாவது கொரோனா கொத்தணியான மினுவாங்கொட கொத்தணிக்கு, உக்ரைனிலிருந்து வந்த விமானத்தின் பணிப்பெண் என அரசாங்கம் தெரிவித்திருந்தது. அந்தக் கொத்தணியால் இன்று வரை 50,
000 தொற்றாளர்கள் இலங்கையில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்' என்றார்.
எனவே, இந்த இரண்டாவது கொத்தணி, அதனால் ஏற்பட்ட மரணங்களுக்கான பொறுப்பை உக்ரைனே ஏற்கவேண்டும். இந்நிலையில், உக்ரைனிலிருந்து சுற்றுலாப் பயணிகளை அரசாங்கம் அழைப்பித்திருக்கிறது. எனவே, இந்த அரசாங்கம், மக்களின் சுகாதாரத்துடன் விளையாடுவதால் மக்கள் பீதியில் இருப்பதாகவும் தெரிவித்தார்.
21 Apr 2026
21 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 Apr 2026
21 Apr 2026