Freelancer / 2021 ஒக்டோபர் 05 , பி.ப. 09:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
வயதுக்கு வந்தவர்கள், பெண்கள், நோயெதிர்ப்பு குறைபாடுள்ள நபர்கள் மற்றும் கொரோனா தொற்றுக்குள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களுக்கு மீண்டும் கொரோனா தொற்றுவதற்கு அதிக ஆபத்து உள்ளது என்று வெளிநாட்டு ஆராய்ச்சி மூலம் கண்டறியப்பட்டுள்ளது.
ஸ்ரீ ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தின் நோயெதிர்ப்பு மற்றும் மூலக்கூறு மருத்துவத் துறையின் பணிப்பாளர் டொக்டர் சந்திம ஜீவந்தர, ஆராய்ச்சி தொடர்பில் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
கொவிட் -19 இன் ஒரு அத்தியாயத்துக்குப் பின்னர், மீண்டும் தொற்று ஏற்படுவதற்கான 1% அபாயத்தை ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன.
"மறு நோய்த்தொற்றுடன் தொடர்புடைய சில காரணிகளின் அடிப்படையிலான வழிமுறைகள் (உதாரணமாக பெண்களுக்கு அதிக ஆபத்து) மேலும் விசாரணை தேவை" என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, பூஸ்டர் தடுப்பூசிக்குப் பின்னர், கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிர் பிழைத்தவர்களில் பிறபொருள் எதிரிகளின் அளவுகளில் கணிசமான உயர்வை ஆராய்ச்சி நிரூபித்துள்ளது.
நோய் எதிர்ப்பு சக்தி இன்னும் வரையறுக்கப்படாததால் அது இலங்கையை எப்படி பாதிக்கும் என்பதை தற்போதைய சூழலில் கணிப்பது கடினம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறாயினும், தடுப்பூசி போடப்பட்டாலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைபிடிக்குமாறு அவர் மக்களை கேட்டுக்கொண்டார்.
12 minute ago
30 minute ago
40 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
30 minute ago
40 minute ago