J.A. George / 2021 ஜனவரி 04 , மு.ப. 08:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாட்டில் மேலும் இரண்டு கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானோரின் மரணங்கள் நேற்று(03) பதிவாகியதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன்படி இலங்கையில் பதிவான கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானோரின் மரணங்களின் மொத்த எண்ணிக்கை 213 ஆக உயர்வடைந்துள்ளது.
வெலிபென்ன பகுதியை சேர்ந்த 67 வயதான பெண், ஹோமாகம வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று உயிரிழந்தார்.
அவரது மரணத்திற்கான காரணம் கடுமையான மார்பு நோய் மற்றும் கொவிட் 19 நியூமோனியா நிலையென தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், கொழும்பு 15 பகுதியை சேர்ந்த 76 வயதான பெண், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் இருந்து ஹோமாகம ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் நேற்று உயிரிழந்தார்.
அவரது மரணத்திற்கான காரணம் கொவிட் 19 நியூமோனியா, இதய நோய் நிலைமை மற்றும் வலிப்பு நோய் என அறிவிக்கப்பட்டுள்ளது.
21 Apr 2026
21 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 Apr 2026
21 Apr 2026