J.A. George / 2020 நவம்பர் 11 , பி.ப. 04:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றால் மேலும் இருவர் இன்று (11) உயிரிழந்துள்ளனர்.
கொழும்பு 11 பகுதியை சேர்ந்த 40 வயதுடைய ஆண் ஒருவர், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.
அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனையில் கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, களனி பிரதேசத்தை சேர்ந்த 45 வயதுடைய நபர், கொரோனா தொற்றுக்கு உள்ளான நிலையில் கடந்த 01ஆம் திகதி ஹம்பாந்தோட்டை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்த நிலையில், கொரோனா வைரஸ் தொற்றால் ஏற்பட்ட சுவாசிப்பதில் சிரமம் காரணமாக உயிரிழந்துள்ளார்.
முன்னதாக, கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகிய நிலையில் பாணந்துறையை சேர்ந்த 80 வயதுடைய ஒருவர் உயிரிழந்தார்.
பொலிஸ் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டது.
அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனையில் கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், இலங்கையில் இன்று (11) இதுவரையான காலப்பகுதியில் மூவர் மரணமடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து, இலங்கையில் பதிவான கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் மரண எண்ணிக்கை 44ஆக உயர்ந்தது.
6 hours ago
6 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
6 hours ago
7 hours ago