2025 ஜூலை 24, வியாழக்கிழமை

கொரோனாவுக்கு பயந்து தலைமன்னாருக்கு வந்தவர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர்

Editorial   / 2020 ஜூன் 03 , பி.ப. 12:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியாவில் கொரோனா தொற்று வேகமாகப் பரவி வருவதால் ஏற்பட்ட பயம் காரணமாக, நபரொருவரும் அவரது மகளும் இந்தியாவிலிருந்து கடல் மார்க்கமாக படகொன்றில் தலைமன்னாருக்கு வந்துள்ளதாக, மடு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


குறித்த நபர், யுத்தம் காரணமாக, 1990ஆம் ஆண்டு இந்தியாவுக்கு இடம்பெயர்ந்து குடும்பத்துடன் வாழ்ந்து வரும் நிலையிலேயே, நேற்று (2) தனது மூத்த மகளுடன் தலைமன்னாருக்கு வருகைத் தந்துள்ளார்.


அத்துடன் தான் இலங்கைக்கு வந்த பின்னர், தனது மனைவி மற்றும் மற்றைய மகளையும் இலங்கைக்கு அழைத்துக்கொள்ளும் எதிர்பார்ப்பில் இவர் இலங்கைக்கு வந்ததையடுத்து, இவர்களை தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தனிமைப்படுத்தல் நிறைவடைந்த பின்னர், சட்டவிரோத இடம்பெயர்வு தொடர்பில் விசாரணை நடத்தவுள்ளதாக மடு பொலிஸார் தெரிவித்தனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .