Freelancer / 2021 ஒக்டோபர் 19 , பி.ப. 09:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
சினோபாம் தடுப்பூசி போடப்பட்டவர்களின் உடல் தொடர்ந்து கொரோனா வைரஸை எதிர்த்து போராடும் ஆற்றலைக் கொண்டுள்ளது என்று ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் ஒவ்வாமை, நோய் எதிர்ப்பு மற்றும் செல் உயிரியல் பிரிவு நடத்திய பரிசோதனையில் தெரியவந்துள்ளது.
சினோபாம் தடுப்பூசியின் மூலம் பிறபொருள் எதிரிகள் உற்பத்தி மற்றும் உடலில் உள்ள கொரானா வைரஸுக்கு டி செல்கள் பதில் அளிப்பது தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளிலேயே இவ்விடயம் கண்டறியப்பட்டுள்ளது.
சினோபாம் தடுப்பூசியின் இரண்டாவது டோஸைப் பெற்ற 12 வாரங்களுக்குப் பின்னர், உடலில் உள்ள டி செல்கள் கொரோனா வைரஸுக்கு வெளி உடலாக வெற்றிகரமாக பதிலளித்ததாகவும் ஆய்வில் தெரியவந்துள்ளது.
இந்த ஆய்வு குறித்து கருத்து தெரிவித்த பிரிவின் தலைவர் டொக்டர் சந்திம ஜீவந்தரா, அனைத்து வயதினருக்கும் தடுப்பூசியால் உண்டாகும் நோய் எதிர்ப்பு சக்தி காலப்போக்கில் குறைந்து வருவதாக தெரிவித்தார்.
குறிப்பாக வைரஸுக்கு எதிரான பிறபொருள் எதிரிகள், 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு, கணிசமாகக் குறைவதாகவும் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
இருப்பினும், பலவீனமான நோயெதிர்ப்பு அமைப்பு ஏற்பட்டால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுதல் மற்றும் நோயின் தீவிரம் தொடர்பில் பரிசோதனைகள் அவசியம் என்று பரிசோதனைக் குழு கருதுகிறது.
16 minute ago
8 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
8 hours ago
8 hours ago