2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

கொலை வழக்கில் ஒருவருக்கு மரண தண்டனை

S.Renuka   / 2025 ஏப்ரல் 24 , மு.ப. 11:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

கடந்த 2015ஆம் ஆண்டு ஹெட்டி வீதியில் அமைந்துள்ள  தங்குமிடத்தில்  பெண் ஒருவரை கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட சந்தேக நபரான பேட்ரிக் கிருஷ்ணானந்தனை குற்றவாளியாக இனங்கண்ட கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஆதித்யா படபெண்டி, அவருக்கு மரண தண்டனை விதித்தார்.

பாதிக்கப்பட்ட பெண்ணைக் கொன்ற கிருஷ்ணானந்தன், அவரது உடலை ஒரு பயணப் பையில் மறைத்து வைத்ததாகவும், பின்னர் அதை பாஸ்டியன் மாவத்தை பேருந்து நிலையத்திற்கு அருகிலுள்ள பேருந்து நிறுத்தத்தில் விட்டுச் சென்றதாகவும் வழக்குரைஞர்கள் நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டுவந்திருந்தனர்.  

முழு விசாரணைக்குப் பிறகு, நீதிமன்றம் அவரை சந்தேகத்திற்கு இடமின்றி குற்றவாளி என கண்டறிந்து மரண தண்டனை விதித்தது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X