2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

கொலைச்சம்பவத்துடன் தொடர்புடைய நால்வருக்கு மறியல்

Editorial   / 2020 ஜனவரி 06 , பி.ப. 02:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

தலாப்பிட்டிய பகுதியில் உள்ள மாணிக்கல் வியாபாரியின் வீட்டில் இடம்பெற்ற கொலை தொடர்பில் கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்கள் நால்வர், நாளை மறுதினம் வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்கள் காலி பதில் நீதவான் லலித் பத்திரன முன்னிலையில் இன்று (06) ஆஜர்ப்படுத்தப்பட்டனர்.

கடந்த வருடம் செம்டெம்பர் 19ஆம் திகதி இரவு நேரத்தில் வீட்டின் பின்புறத்தில் நின்றிருந்த 69 வயதுடைய நபர், கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருந்தார்.

இந்த கொலைச்சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார்,  அலைபேசி உரையாடல்களை அடிப்படையாக வைத்து நான்கு மாதங்களின் பின்னர் சந்தேக நபர்களை கைதுசெய்துள்ளனர்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .