2025 ஜூலை 14, திங்கட்கிழமை

கொள்ளை சம்பவத்துடன் தொடர்புடைய நால்வர் கைது

Editorial   / 2018 ஒக்டோபர் 21 , பி.ப. 12:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

அநுராதபுரம் – மிஹிந்தலை பிரதேசத்திலுள்ள வர்த்தக நிலையமொன்றில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவம் தொடர்பில் நான்கு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

கடந்த 15 ஆம் திகதி அதிகாலை 1.30 மணியளவில், குறித்த வர்த்தக நிலையத்திலிருந்து, சுமார் 11 இலட்சம் ரூபாய் பணத்தை கொள்ளையிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் இக்கொள்ளைச் சம்பவம் தொடர்பில் பிரதான சந்தேகநபராக, குறித்த வர்த்தக நிலையத்தில் வேலைப் பார்க்கும் நபரொருவரும் ஏ​னைய மூவரும் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், இவர்களிடமிருந்து குறித்த பணத்திலிருந்து தற்பொழுது 80 ஆயிரம் ரூபாய் மீட்கப்பட்டுள்ளதோடு, மிகுதி பணத்தை போதைப் பொருள் பாவனைக்காக செலவளித்துள்ளதாகவும் பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசார​ணைகளிலிருந்து தெரிய வந்துள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .