2025 ஜூலை 05, சனிக்கிழமை

கொழும்பில் 2,000 ​பொலிஸ் குவிப்பு

Editorial   / 2018 டிசெம்பர் 15 , பி.ப. 12:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிறிஸ்மஸ் மற்றும் புதுவருடக் கொண்டாட்டங்களை முன்னிட்டு, மக்களின் பாதுகாப்புக்காகவும் போக்குவரத்துக் கட்டுப்பாடுகளுக்காவும் கொழும்பு நகரம் முழுவதும் 2,000 பொலிஸார் பணிக்கமர்த்தப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்த விஷேட நடவடிக்கைகளின் போது, சிவில் உடையணிந்த பொலிஸ் அதிகாரிகளும் விஷேட பொலிஸ் ​குழுக்களும், கொழும்பு முழுவதும் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.

பொதுமக்களுக்கு, ​பொதுப்போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படும் வகையில் செயற்படும் நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மதுபோதையில் வாகனம் செலுத்தும் சாரதிகள் சம்பந்தமாக, இம்முறை விஷேடமாக கவனத்தில் கொள்ளப்படும் என்றும் பொலிஸ் ஊடகப்பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .