2025 மே 01, வியாழக்கிழமை

கொழும்பில் கொரோனா: வீதியை இலாவகமாக கடந்தது

Editorial   / 2021 நவம்பர் 09 , பி.ப. 02:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆர்ப்பாட்டங்களை முன்னெடுப்பதற்காக, ஜனாதிபதி செயலகத்துக்கு அண்மித்த பகுதியில், “ ஆர்ப்பாட்ட இடம்” ஒதுக்கப்பட்டுள்ளமை யாவரும் அறிந்ததே.

அந்த இடத்துக்கு முன்பாக, வீதியோரத்தில் நூதனமான ஆர்ப்பாட்டமொன்று இன்று (09) முன்னெடுக்கப்பட்டது. இறுதியில், பொலிஸ் பாதுகாப்புக்கு மத்தியில், அந்த கொரோனா ஆர்ப்பாட்டக்காரர்கள் வீதியை கடந்து, மறுபக்கத்துக்குச் சென்றனர்.

இவை தொடர்பிலான வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகிவருகின்றன.

சுகாதார வழிகாட்டல்களின் பிரகாரம் கொரோனா தொற்றுக்கு எதிரான ஆடையை அணிந்திருந்த சிலரும், கொரோனாவைப் போன்று வேடமிட்டிருந்த ஒருவரும், இவ்வாறான நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

அவ்வாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் ஏந்தியிருந்த பதாதைகளில், “முகக்கவசத்தை அணிவோம்” “ கொரோனா தொற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்வோம்” உள்ளிட்ட வாசகங்கள் எழுதப்பட்டிருந்தன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .