2025 ஜூலை 05, சனிக்கிழமை

கொழும்பில் தூசு துகள்களின் தரச்சுட்டி மீண்டும் அதிகரிப்பு

Editorial   / 2019 டிசெம்பர் 31 , பி.ப. 02:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு நகரை அண்மித்த வளிமண்டலத்தில் தூசு துகள்களின் தரச்சுட்டி மீண்டும் அதிகரித்துள்ளதாக தேசிய கட்டட ஆய்வு நிறுவகம் தெரிவித்துள்ளது.

கொழும்பு நகரை அண்மித்த வளிமண்டலத்தில் இன்று (31) காலை 100 முதல் 150  புள்ளியாக தூசு துகள்களின் தரச்சுட்டி காணப்பட்டதாக தேசிய கட்டட ஆய்வு நிறுவகத்தின் சிரேஷ்ட புவிச்சரிதவியல் நிபுணர் சரத் பிரேமசிறி கூறியுள்ளார்.

இதன் காரணமாக சுவாச நோயாளர்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டும் எனவும், வயதானவர்கள், சிறு பிள்ளைகள் மற்றும் கர்ப்பிணி தாய்மார்கள் ஆகியோர் மிகுந்த அவதானத்துடன் இருக்க வேண்டும் என அவர் அறிவுறுத்தியுள்ளார்.

அத்துடன், புதுவருட பிறப்பை முன்னிட்டு பட்டாசுகளின் பயன்பாடு அதிகரிக்கும் போது, அது  வளிமண்டலத்தை பாதிக்கக்கூடும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .