S. Shivany / 2020 டிசெம்பர் 31 , பி.ப. 01:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொவிட் 19 தொற்றாளர்களாக நாட்டில் நேற்று(30) அடையாளம் காணப்பட்ட 639 தொற்றாளர்களில், அதிகமானோர் கம்பஹா மாவட்டத்தைச் சேர்ந்தவர்களென, கொவிட் 19 ஒழிப்புக்கான தேசிய செயலணி தெரிவித்துள்ளது.
இதற்கமைய, கம்பஹா மாவட்டத்தில் நேற்றைய தினம், 190 பேர் புதிதாக தொற்றுக்குள்ளாகியுள்ளனர்.
அத்துடன், கம்பஹா மாவட்டத்துக்கு அடுத்தபடியாக 133 தொற்றாளர்கள் கொழும்பு மாவட்டத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
மேலும் களுத்துறையில் 50 பேரும், அம்பாறையில் 42 பேரும், இரத்தினபுரியில் 27 பேரும், யாழ்ப்பாணத்தில் 21 பேரும், கேகாலையில் 19 பேரும், குருநாகலில் 18 பேரும், திருகோணமலையில் 4 பேரும் ஏனைய மாவட்டங்களில் தலா ஒருவர் இருவர் என்ற அடிப்படையிலும் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
கம்பஹா மாவட்டத்தின் பூகொட பிரதேசத்தில் அதிகமானோர் கொரோனா தொற்றாளர்களாக நேற்று அடையாளம் காணப்பட்டனர். நேற்று மாத்திரம் 47 பேருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
அத்துடன், கொழும்பு மாவட்டத்தின் அவிசாவளை பிரதேசத்தில் 83 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
23 Mar 2026
23 Mar 2026
23 Mar 2026
23 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 Mar 2026
23 Mar 2026
23 Mar 2026
23 Mar 2026