Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 16, புதன்கிழமை
Editorial / 2018 ஒக்டோபர் 01 , பி.ப. 03:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொழும்பில் சேர்க்கப்படும் குப்பைகள் புத்தளம்- அருவக்காலு குப்பை சேகரிப்பு மத்திய நிலையம் மற்றும் சுகாதார கழிவு சேகரிக்கும் மத்திய நிலையங்களுக்குக் கொண்டுச் செல்லும் நடவடிக்கை பிற்போடப்பட்டுள்ளதாக, பெருந்தெருக்கள் மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சு அறிவித்துள்ளது.
இன்றிலிருந்து(1) குறித்த குப்பைகளை புத்தளத்துக்கு கொண்டு செல்ல இதற்கு முன்னர் திட்டமிட்டிருந்த போதிலும், அங்கு மேற்கொள்ளப்பட்டு வரும் கட்டுமானப் பணிகளின் தாமதம் காரணமாக, கொழும்பு குப்பைகளை புத்தளத்துக்கு கொண்டு செல்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக அமைச்சின் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
புத்தளம்- அருவக்காலு குப்பை இறக்கும் மத்திய நிலையத்தின் நிர்மாணப் பணிகளின் ஒப்பந்தம் சைனா ஹாபர் இன்ஜினியிரிங் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளதுடன், இதற்கான ஒப்பந்தம் கடந்தாண்டு, டிசம்பர் மாதம் 29ஆம் திகதி செய்யப்பட்டது.
105 மில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான இந்த வேலைத்திட்டத்தை நவம்பர் மாதம் இறுதிக்குள் நிறைவு செய்ய எதிர்பார்த்துள்ளதாக, குறித்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
குறித்த வேலைத்திட்டத்துக்கு அமைவாக, அருவாக்காலு வரை அமைக்கப்படும் ரயில் பாதை ஊடாக, கொழும்பிலிருந்து குப்பைகளை கொண்டு செல்ல முடியுமெனவும் தெரிவிக்கப்படுகின்றது.
எனினும் குறித்த ரயில் பாதையின் நிர்மாணப் பணிகள் அடுத்தாண்டு செப்டம்பர் மாதமே நிறைவு செய்யப்படுமெனவும், அதுவரை குப்பைகளை பிரதான வீதியூடாக கொண்டு செல்ல தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
3 hours ago