Janu / 2024 ஜூலை 15 , பி.ப. 02:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
தலங்கம - கொஸ்வத்த பிரதேசத்தில் இரண்டு தனியார் பேருந்துகள் ஒன்றுடன் ஒன்று மோதியதில் 10 க்கும் மேற்பட்டோர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தலங்கம பொலிஸார் தெரிவித்தனர் .
காயமடைந்தவர்களில் விபத்தை ஏற்படுத்திய 177 இலக்க பேருந்தின் சாரதியும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்தனர் .
இலக்கம் 190 மீகொட - புறக்கோட்டை மற்றும் இலக்கம் 177 கடுவளை - கொள்ளுப்பிட்டி பயணிக்கும் பேருந்துகளே இவ்வாறு விபத்துக்குள்ளாகின .
மீகொடயிலிருந்து புறக்கோட்டை நோக்கிச் சென்ற பேருந்து பத்தரமுல்லை தலாஹேனையை கடந்து பயணிக்கும் போது, கடுவளையிலிருந்து கொள்ளுப்பிட்டி நோக்கிச் சென்ற பேருந்து பின்னால் வந்து மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர் .
50 minute ago
56 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
50 minute ago
56 minute ago