2026 மே 09, சனிக்கிழமை

dd

கொவிட் 19 தொற்றாளர்களின் எண்ணிக்கை உயர்வு

Editorial   / 2020 ஏப்ரல் 11 , பி.ப. 07:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையில் இதுவரை பதிவான மொத்த கொரோனா தொற்று நோயாளர்களின் எண்ணிக்கை 198 ஆகும் என, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க உறுதிசெய்துள்ளார்.

இன்றைய தினம் ஒரு நோயாளர் மாத்திரமே அடையாளங் காணப்பட்டுள்ளார்.

நேற்றைய தினம் (10) இறுதியாக பதிவான 7 நோயாளர்களுள் 6 பேர் ஜாஎல பிரதேசத்தில் கொரோனா தொற்று நோயாளருடன் நெருக்கமான தொடர்புகளை கொண்டிருந்தவர்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது. 

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களில் 54 பேர் இதுவரையில் குணமடைந்து வைத்தியசாலையிலிருந்து வெளியேறியுள்ளனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .