2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

கொவிட்-19 தொற்றுக்குள்ளான 20 பேர் வீடுகளுக்கு அனுப்பிவைப்பு

A.K.M. Ramzy   / 2020 ஏப்ரல் 13 , பி.ப. 06:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொவிட்-19 தொற்றுநோய் சந்தேகம் உள்ள நபர்கள் 20 பேர் இன்று அவரவர் வீடுகளுக்கு அனுப்பப்பட்டனரென, களுத்துறை மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர்  உதய ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.

  அளுத்கம -பண்டாரகமயைச்சேர்ந்த இவர்கள் பிலியந்தலை  சர்வோதய மத்திய நிலைய கட்டடத்தில் தனிமைப்படுத்தப்பட்டிருந்தனர்.
 

அட்டுளுகம- மாராவ பிரதேசத்தில் மார்ச் மாதம் 26ஆம் திகதி கொவிட்-19 தொற்றாளர் ஒருவர் கண்டுபிடிக்கப் பட்டதையடுத்து, குறித்த 20 பேரும் 28ஆம் திகதி தொடக்கம் தனிமைப்படுத்தப்பட்டனர்.


இந்த நிலையில், 16 நாள்கள் தனிமைப்படுத்தலை நிறைவு செய்த இவர்கள், இன்று வீடுகளுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

மேலும், ஏற்கெனவே தொற்றுக் குள்ளானவர்கள் முறையாகக் கவனிக்கப் பட்டுவருவதாகவும் சுகமடைந்து வீடு திரும்பியவர்

மொஹம்மத் முனீர்  கருத்துத் தெரிவிக்கையில்;அரசாங்கம் தங்களை சிறப்பாகக் கவனித்தாகவும் தங்களுக்கு மிகவும் ஆதரவு காட்டியதாகவும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .