2025 ஜூலை 17, வியாழக்கிழமை

’கொவிட் பரிசோதனை மூலோபாயத்தில் தாமதம்’

Editorial   / 2020 ஏப்ரல் 24 , மு.ப. 12:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையில் கொவிட் 19 பரிசோதனை மூலோபாயத்தில் தாமதம் குறித்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவுக்கு அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் நேற்று (23) கடிதமொன்றை அனுப்பியுள்ளது.

கொவிட் 19 தொற்றைக் கட்டுப்படுத்துவதற்கான அர்ப்பணிப்பு, அரசியல் தலைமைத்துவத்தை வெளிப்படுத்தியதற்கு முதலாவதாகவும் கட்டாயாமாகவும் ஜனாதிபதி கோட்டாபயவுக்கு நன்றி என ஆரம்பித்துள்ள குறித்த கடித்தத்தில், கொவிட் 19ஆனது, பொதுச் சுகாதார அவசரநிலை, பூகோள சவால் என்ற நிலையில், இதற்கான மூலோபாயமானது விஞ்ஞான முறையிலான ஆராய்வுகளை அடிப்படையாக இருக்க வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

விஞ்ஞான ரீதியான இயக்குதளமானது, நலன் சார்ந்த பிரச்சினைகள் மட்டுமன்றி, பொருளாதாரம், சமூகம், சட்ட ரீதியான தாக்கம் செலுத்தக்கூடிய விடயதானங்களை உள்ளடக்கியது எனத் தாங்கள் உறுதியாகக் கூற விரும்புவதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

ஆக்ரோஷமான பரிசோதனை, சோதனை, சோதனை, சோதனை மூலோபாயங்களைத் தாங்கள் கடந்த மாதம் 31ஆம் திகதி முன்மொழிந்ததாகவும் இம்மாதம் 19ஆம் திகதி வரை அது நடைமுறைப்படுத்தப்படவில்லை எனவும், சங்கம் குறிப்பிட்டுள்ளது.

அதற்கான காரணங்களாக, தமது முன்மொழிவை ஜனாதிபதி, அரசியல் அதிகாரிகள் ஏற்றுக்கொண்ட போதும், சுகாதார அதிகாரிகள் அதை வழிமொழியவோ அல்லது ஏற்றுக் கொள்ளவில்லை எனவும் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X