Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 05, சனிக்கிழமை
Editorial / 2019 ஜனவரி 08 , மு.ப. 10:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
மிக் விமானம் கொள்வனவுத் தொடர்பில் 2007ஆம் ஆண்டு முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றுக்கு வழங்கிய செவ்வி தொடர்பில் குற்ற விசாரணைப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
2007ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 19ஆம் திகதி தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் கோட்டாபய இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ளதாகவும் இரகசிப் பொலிஸ் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறித்த நிக்ழச்சியின் நகல் ஒன்றைப் பெற்றுத் தருமாறு நீதிமன்றம் ஊடாக குறித்த தொலைக்கட்சி நிறுவனத்துக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் ஊடகச் சுதந்திரம் தொடர்பிலேயே கோட்டா தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கருத்துத் தெரிவித்திருந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சண்டே லீடர் பத்திரிகையின் முன்னாள் ஆசிரியரான லசந்த விக்ரமதுங்க 2007 ஆம் ஆண்டு மிக் விமான கொள்வனவுத் தொடர்பில் கடிதம் ஒன்றை வெளியிட்டிருந்த நிலையில், 2009ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 8ஆம் திகதி கல்கிஸ்ஸ பகுதியில் வைத்து கொல்லப்பட்டிருந்தமைக் குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
40 minute ago
45 minute ago
4 hours ago