2026 மே 09, சனிக்கிழமை

dd

‘கோட்டாவுடன் விரைவில் கலந்துரையாடுவேன்’

Editorial   / 2019 ஓகஸ்ட் 12 , மு.ப. 11:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜனாதிபதி வேட்பாளரான, கோட்டாபய ராஜபக்‌ஷவுடன் எதிர்வரும் நாள்களில் கலந்துரையாட எதிர்பார்த்துள்ளதாக, ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

ஹம்பாந்தோட்டை பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

நாட்டை மீட்டெடுத்து முன்னோக்கி கொண்டு செல்லக்கூடிய வேலைத்திட்டத்தை ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி உருவாக்கியுள்ளதென்றும் அந்த வேலைத்திட்டத்தை பொதுஜன பெரமுனவிடம் முன்வைத்து, அவர்களின் வேலைத்திட்டங்கள் தொடர்பிலும் கலந்துரையாடி நாட்டை கட்டியெழுப்புவதற்கான நடவடிக்கையை ஆரம்பிக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .