2025 டிசெம்பர் 15, திங்கட்கிழமை

‘கோட்டாவை ஆதரிக்க தீர்மானிக்கவில்லை’

Editorial   / 2019 ஓகஸ்ட் 30 , பி.ப. 04:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொதுஜன பெரமுன கட்சி தெரிவுசெய்துள்ள ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு ஆதரவு வழங்குவது தொடர்பான தீர்மானத்துக்கு, தமது தரப்பு இன்னும் முன்வரவில்லையென, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

நுவரெலியாவில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே, அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இதன்போது தொடர்ந்து கருத்துரைத்துள்ள அவர், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி முன்வைத்த யோசனைகளுக்கு கோட்டாபய ராஜபக்ஷ இணக்கம் தெரிவித்தார் எனவும் கூறியுள்ளார்.

அத்துடன்,  கட்சி தொடர்பில் மேலும் கலந்துரையாடல்களில்  ஈடுபட முடிவு செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .