2025 ஓகஸ்ட் 27, புதன்கிழமை

சு.க பிளவுபடாத வகையில் ஒழுக்காற்று நடவடிக்கை

Gavitha   / 2016 மே 12 , மு.ப. 09:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிருளப்பனையில் இடம்பெற்ற மே தினக் கூட்டத்தில் கலந்துக்கொண்ட ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் பற்றி, இந்த மாதம் கூடவுள்ள மத்திய செயற்குழுக் கூட்டத்தின் போது விவாதிக்கப்படும் என்று ஐக்கிய மக்கள் சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

மத்திய செயற்குழு முடிவுகள், கட்சி பிளவுபடாமல் இருக்கும் வகையில் எட்டப்படும் என்றும் தெரிவித்த அமைச்சர், மேலும் பல கட்சியினரை இணைத்துக்கொண்டு வலுவான கட்சியாக முன்னோக்கிப் பயணிக்கவேண்டிய கடப்பாட்டில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி உள்ளதென்றும் கூறினார்.

தவுல்தென ஞானிஸ்ஸர ஸ்ரீ லங்கா அமரபுர மகா சங்கத் தேரரை, இன்று வியாழக்கிழமை சந்தித்த அமைச்சர், அங்கு கூடியிருந்த ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே மேற்கண்டவாறு கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X