2025 ஓகஸ்ட் 27, புதன்கிழமை

சீகிரியா வனப்பகுதியை அழித்த ஹோட்டல் முகாமையாளர் கைது

George   / 2016 மே 13 , மு.ப. 04:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

சீகிரியா வனப்பகுதியை அனாவசியமாக அழித்து, கட்டட நிர்மாண பணிகளை மேற்கொண்ட குற்றச்சாட்டில் ஹோட்டல் முகாமையாளர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தம்புள்ளை நீதிமன்றத்தின் உத்தாரவின்  பேரில் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் ஊடாக சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

குறித்த ஹோட்டலுக்கு அருகில் இருந்த சுமார் 15 ஏக்கர் வனப்பகுதியை கடந்த 6ஆம் திகதி அழித்துவிட்டு, சட்டவிரோதமான முறையில் நிர்மாணப்பணிகளை முன்னெடுத்த குற்றச்சாட்டில் ஹோட்டல் ஊழியர்கள் இருவர் கைதுசெய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டனர்.

அவர்கள் வழங்கிய தகவலுக்கு அமைய ஹோட்டல் முகாமையாளரை கைதுசெய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X