2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

சிங்களத்தை காணவில்லை

Princiya Dixci   / 2016 நவம்பர் 29 , மு.ப. 04:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ்ப்பாணத்தில் மீள்குடியேறியுள்ள பெரும்பான்மையின மக்களுக்கு விநியோகிக்கப்பட்டுள்ள அடையாளத்தை உறுதிப்படுத்துவதற்கான பத்திரம், தமிழ் மொழியில் அச்சடிக்கப்பட்டு விநியோகிக்கப்பட்டதால், அம்மக்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளதாக, நாட்டுக்காக நாம் எனும் தேசிய அமைப்பின் ஒன்றியம், தெரிவித்தது.

கொழும்பு நூலக மற்றும் ஆவணாவாக்கற் சபையின் கேட்போர் கூடத்தில், நேற்றுத் திங்கட்கிழமை நடத்திய செய்தியாளர் மாநாட்டின் போதே, மேற்படி ஒன்றியம், இந்தச் செய்தியை வெளியிட்டது.  

இந்த ஊடகச் சந்திப்பில் கலந்துகொண்ட ராவணா பலய அமைப்பின் ஏற்பாட்டாளர் இத்தாகந்தே சத்தாதிஸ்ஸ தேரர், “யாழ்ப்பாணம் மாவட்டச் செயலாளரால் விநியோகிக்கப்பட்ட மேற்படி அடையாளத்தை உறுதிப்படுத்துவதற்கான பத்திரத்தின் ஒரு சொல்லேனும், சிங்கள மொழியில் காணப்படவில்லை” என்றார்.  

“அதேபோன்று, இலங்கைக்குச் சொந்தமான விமானங்களில் பயணிக்கும் பயணிகளுக்கு விநியோகிக்கப்படும் உணவு மெனு அட்டையில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து உணவுகளும் ஹலால் உணவுகள் என்று குறிப்பிடப்பட்டுள்ளன” என்றும், தேரர் குறிப்பிட்டார்.  

புதிய அரசியலமைப்பைத் தோற்கடிப்பதற்காக, 33 சிங்கள பௌத்த அமைப்புக்கள் ஒன்றிணைந்துள்ளதாகவும் அவர்களுடன் ஒன்றிணைந்து, எதிர்வரும் ஜனவரி மாதம் முதல், நாடு முழுவதிலும் கலந்துரையாடல்களை நடத்தத் திட்டமிட்டுள்ளதாகவும் அவர், மேலும் குறிப்பிட்டார்.    


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .