2025 மே 21, புதன்கிழமை

சா/த பரீட்சை ஆரம்பமானது: ஜனாதிபதி வாழ்த்து

Kanagaraj   / 2015 டிசெம்பர் 08 , மு.ப. 03:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

கல்விப்பொதுத் தராதர சாதாரணத் தரப்பரீட்சை நாடளாவிய ரீதியில் அமைக்கப்பட்டுள்ள 4,670 மத்தியநிலையங்களில் இன்றுக்காலை 8 மணிக்கு ஆரம்பமானது. இந்த பரீட்சை எதிர்வரும் 17ஆம் திகதி வரையிலும் நடைபெறும்.

இந்த முறை பரீட்சையில் 6,67,715 பரீட்சார்த்திகள் தோற்றவுள்ளனர். அவர்களில் 4,03,444 பேர் பாடசாலை பரீட்சார்த்திகள் என்றும் 2,61,271 பேர் தனிப்பட்ட பரீட்சார்த்திகள் என்றும் பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

சா/த பரீட்சைக்கு தோற்றுகின்ற சகல மாணவர்களுக்கும் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இது தனிப்பட்ட ஒருவரினதும் நாட்டினதும் வெற்றியாகும் என்றும் தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .