2025 மே 21, புதன்கிழமை

சுதந்திர ஆணைக்குழுக்களின் குறைபாடுகளை அரசாங்கம் அறிகிறது: விஜயதாஸ

Gavitha   / 2015 டிசெம்பர் 02 , மு.ப. 03:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

தேவையாயின் புதிய சட்டங்களை ஆக்கி, திருத்தம் செய்வதற்காக, புதிதாக அமைக்கப்பட்ட சுதந்திர ஆணைக்குழுக்களில்  காணப்படும் குறைபாடுகளை அறியும் செயன்முறையில் அரசாங்கம் ஈடுபட்டிருப்பதாக நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்தார்.

19 ஆவது திருத்தத்தின் கீழ், புதிதாக அமைக்கப்பட்ட சில சுதந்திர ஆணைக்குழுக்களின் பொறுப்புக்களில் தெளிவின்மை காணப்படுவதையிட்டு அரசாங்கம், இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளது.

குறிப்பாக தேர்தல்கள் ஆணைக்குழு மற்றும் எல்லை நிர்ணய ஆணைக்குழு தொடர்பில் பிரச்சினைகள் தோன்றியுள்ளன.

ஏதாவது, அவசர தேவையிருந்தால் மட்டுமே இவ்வாறு செய்யப்படும் என நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்தார்.

நாம் இந்த விடயங்களைப் புதிதாக வரவுள்ள அரசியலமைப்பில் சேர்க்கவுள்ளோம். அப்போது, இனப்பிரச்சினைகளுக்கு முடிவு ஏற்படும் என அவர் கூறினார்.

19 ஆவது திருத்தத்தின் கீழ் ஒன்பது ஆணைக்குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. தேர்தல், எல்லைநிர்ணயம், தேசிய கொள்வனவு ஆணைக்குழு என்பன புதிதாக அமைக்கப்பட்ட ஆணைக்குழுக்கள் ஆகும்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X