2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

சுதந்திரதினக் கொண்டாட்டங்களைப் பார்க்க மக்களுக்கு வாய்ப்பு: கூட்டு எதிர்க்கட்சி பங்கேற்காது

Gavitha   / 2016 பெப்ரவரி 02 , மு.ப. 03:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாளை மறுதினம் இந்த நாட்டின் சுதந்திர தினமாகும். இந்த சுதந்திரதினக் கொண்டாட்டங்களைப் பார்வையிடுவதற்கு பொதுமக்கள் அனைவருக்கும் வாய்ப்பு ஏற்படுத்திக்கொடுக்கப்படும் என பொலிஸ் மா அதிபர் என்.கே.இலங்ககோன் தெரிவித்தார்.

இதேவேளை, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகன்மார்களில் ஒருவரான யோஷித ராஜபக்ஷவை கைது செய்தமைக்கு கண்டனம் தெரிவித்துள்ள ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினருமான
தினேஷ் குணவர்தன, சுதந்திரதினக் கொண்டாட்டம் உட்பட இனிவரும் அரச நிகழ்வுகளில் கூட்டு எதிர்க்கட்சியினர் கலந்துகொள்ள மாட்டார்கள் என்றும் கூறினார்.

நேற்று திங்கட்கிழமை (01) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாடொன்றில் உரையாற்றும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், சட்டவிரோதமான முறையிலேயே நிதி குற்றப்புலனாய்வு பிரிவு ஆரம்பிக்கப்பட்டது என்பதை, கூட்டு எதிர்க்கட்சிய பலமுறை வலியுறுத்தி வந்ததாகவும் கூறினார்.

எனினும் கூட்டு எதிர்க்கட்சியினரின் எதிர்ப்பை நாடாளுமன்றத்தில் முன்வைப்பதற்கு,சபாநாயகர் அனுமதி வழங்கவில்லை என்று தெரிவித்த அவர், அரசியல் விவகாரங்களில் ஏற்பட்டுள்ள நிலைமை மாறும் வரை, கூட்டு எதிர்க்கட்சியினர் எந்தவொரு அரச நிகழ்வுகளில் கலந்துகொள்ள மாட்டார்கள் என்றும் குறிப்பிட்டார்.

இதேவேளை, சுதந்திரதினக் கொண்டாட்டங்களைப் பார்வையிட வருகை தரும் பொதுமக்கள், காலை 8 மணிக்கு முதல் காலி முகத்திடலுக்குள் பிரவேசிக்க வேண்டும் எனவும் வாகனங்களில் பயணிப்பவர்கள், அவர்களது வாகனங்களை தரித்து நிறுத்தக்கூடிய வசதி வாய்ப்புக்கள் ஏற்படுத்திக் கொடுக்கப்படும் எனவும் பொலிஸ் மா அதிபர் குறிப்பிட்டார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X