2025 மே 21, புதன்கிழமை

சென்னை- கட்டுநாயக்க விமான சேவை ஆரம்பம்

Kanagaraj   / 2015 டிசெம்பர் 08 , மு.ப. 03:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்த சென்னைக்கும் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்துக்கும் இடையிலான விமானச் சேவைகள் இன்று செவ்வாக்கிழமை காலை முதல் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

சென்னை விமான நிலையத்திலிருந்து 56 பயணிகளுடன் கட்டுநாயக்க விமான நிலையத்தை இன்று அதிகாலை வந்தடைந்த விமானம், மற்றொரு குழு பயணிகளுடன் இன்று காலை 8.45க்கு சென்னை நோக்கி பயணித்துள்ளதாக விமான நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடும் மழையை அடுத்து ஏற்பட்ட வெள்ளம் காரணமாக சென்னைக்கும் கட்டுநாயக்க பண்டாரநாயக்க விமான நிலையத்துக்கும் இடையிலான விமானச்சேவைகள் தற்காலிகமா இடைநிறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிட்டத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .