2025 மே 21, புதன்கிழமை

சென்னையில் உள்நாட்டு விமான சேவைகள் ஆரம்பம்

Thipaan   / 2015 டிசெம்பர் 06 , மு.ப. 06:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் உள்நாட்டு விமான போக்குவரத்து இன்று முதல் ஆரம்பமாகவுள்ளதாக சென்னை விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கனமழையால் பாதிக்கப்பட்டிருந்த சென்னை விமான நிலையம் வரும் 8ஆம்திகதி வரை  மூடப்பட்டிருக்கும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் உள்நாட்டு போக்குவரத்து முனையம் சீரான நிலையில் நான்கு நாட்களுக்குப் பின்னர், இன்று முதல் விமான போக்குவரத்து தொடங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

இன்று காலை 10 மணிக்கு எயார் இந்தியா விமானம் சென்னையில் இருந்து அந்தமானுக்கு புறப்பட்டுள்ளது. டெல்லியில் இருந்து இன்று காலை 11.10 க்கு எயார் இந்தியா விமானம் சென்னைக்கு புறப்பட்டுள்ளது.

அந்தமானில் இருந்து மதியம் 2 மணிக்கு சென்னைக்கு விமானம் புறப்படுகிறது. சென்னையில் இருந்து மதியம் 2.45 க்கு டெல்லிக்கும், 3.15க்கு ஹைதராபாத்துக்கும் எயார் இந்தியா விமானம் இயக்கப்பட உள்ளதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .