2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

செப்.25 முஸ்லிம் பாடசாலைகளுக்கு விடுமுறை

Gavitha   / 2015 செப்டெம்பர் 22 , மு.ப. 08:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து முஸ்லிம் பாடசாலைகளுக்கும் எதிர்வரும் வெள்ளிக்கிழமை (25) அன்று விடுமுறை தினமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக, கல்வியமைச்சு அறிவித்துள்ளது.

நாளை மறுதினம் வியாழக்கிழமை (24) ஹஜ்ஜூப் பெருநாள் கொண்டாடப்படவுள்ளமையினாலேயே, வெள்ளிக்கிழமை விடுமுறை தினமாக்கப்பட்டுள்ளது.

தபால் அமைச்சரினதும் முஸ்லிம் மத அலுவல்கள் அமைச்சரினதும் வேண்டுகோளுக்கிணங்கவே, இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.

எனினும் வெள்ளிக்கிழமை (25) அன்று விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டாலும், அதற்கு பதிலாக ஒக்டோபர் மாதம் 03ஆம் திகதி சனிக்கிழமை நாளன்று பாடசாலை தினமாக பிரகடம் செய்யப்படும் என்றும் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X