2025 ஓகஸ்ட் 28, வியாழக்கிழமை

சீமெந்து வாங்க முன்னர் பொதியுறையைப் பாருங்கள்

Menaka Mookandi   / 2016 ஜூன் 03 , மு.ப. 05:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

சீமெந்துக்காக அதிகரிக்கப்பட்ட புதிய விலையானது, புதிய கையிருப்புகளுக்கு மாத்திரமே நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஜூன் முதலாம் திகதி முதலான கையிருப்புகளுக்கு மாத்திரம் 930 ரூபாய் விலையினைச் செலுத்துமாறு, நுகர்வோர் அதிகார சபை, பொதுமக்களைக் கேட்டுள்ளது.

50 கிலோகிராம் நிறையுடைய சீமெந்து மூடையொன்றின் விலை, 60 ரூபாயினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன்படி, இதுவரை காலமும் 870 ரூபாய்க்கு காணப்பட்ட சீமெந்து மூடையொன்று, 930 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது.  

சீமெந்து நிறுவனங்கள் பலவற்றின் வேண்டுகோளுக்கு இனங்கவே, சீமெந்தின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதென அதிகாரசபை மேலும் கூறியது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .