Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Princiya Dixci / 2016 டிசெம்பர் 05 , மு.ப. 01:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
“கொழும்பு சிறைச்சாலை வைத்தியசாலையிலுள்ள வைத்தியர்களில் ஒருவர், நீதிமன்ற உத்தரவின்பேரில், விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முக்கிய பிரமுகருடன் தொடர்புகளைப் பேணி வருவதாக தகவல்கள் கிடைத்துள்ளன” என, சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன, தெரிவித்துள்ளார்.
சிறைச்சாலையிலுள்ள முக்கிய பிரமுகரான நபரை, சிறைச்சாலை வைத்தியசாலையில் சேர்ப்பதற்கான நடவடிக்கைகளை குறித்த வைத்தியர் மேற்கொண்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளன” என அமைச்சர் கூறினார்.
எனவே, இது தொடர்பில் ஆராய்ந்து தமக்கு அறிக்கைகளைச் சமர்ப்பிக்குமாறு, அதிகாரிகளுக்கு அமைச்சர் பணித்துள்ளார்.
கொழும்பு சிறைச்சாலை வைத்தியசாலையானது, சிறைச்சாலைகள் திணைக்களத்தின் கீழ், பராமரிக்கப்படுவதுடன், அதற்குத் தேவையான வைத்தியர்கள், சுகாதார அமைச்சின் ஊடாகவே நியமிக்கப்படுகின்றனர்.
அறிக்கை கிடைத்த பின்னர், அது தொடர்பிலான விசாரணைகள் முன்னெடுக்கப்படும் என அமைச்சர் குறிப்பிட்டார்.
6 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
8 hours ago