2025 ஓகஸ்ட் 13, புதன்கிழமை

சிறைகளில் சி.சி.டி.வி கமெரா பொருத்தும் திட்டம் கைவிடப்பட்டது

Princiya Dixci   / 2016 ஒக்டோபர் 13 , மு.ப. 07:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

வெலிக்கடை, கொழும்பு விளக்கமறியல் மற்றும் மகசின் சிறைசாலை வளாகங்களில் சி.சி.டி.வி கமெரா பொருத்தத் தீர்மானித்து, முன்னெடுக்கப்பட்ட வேலைத்திட்டம், தற்போது கைவிடப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

சிறைச்சாலைகளுக்கு சி.சி.டி.வி கமெரா பொருத்துவதற்கு 30 மில்லியன் ரூபாய் செலவாகும் என்பதனால் இவ் வேலைத்திட்டம் கைவிடப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் பேச்சாரளர் துஷார உபுல்தெனிய தெரிவித்தார்.

எனினும், சி.சி.டி.வி கமெரா பொருத்துவதாகத் தீர்மானிக்கப்பட்ட மேற்குறிப்பிட்ட மூன்று சிறைச்சாலைகளின் நுழைவாயில்களில் மாத்திரம், சி.சி.டி.வி கமெரா பொருத்துவதற்குத் தீர்மானம் எடுத்துள்ளதாகவும் இதனை இவ்வருட இறுதிக்குள் செய்து முடிக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .