2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

சிறுநீரக வியாபாரம்: வைத்தியர் அல்லாதவர்களுக்கும் தொடர்பு

Princiya Dixci   / 2016 பெப்ரவரி 06 , மு.ப. 07:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிறுநீரக வியாபாரம் தொடர்பில் வைத்தியர்கள் மட்டுமல்லாது வைத்தியர் அல்லாத நபர்களும் தொடர்புபட்டுள்ளதாகவும் இது தொடர்பில் 'பங்ச' என்பவரை விசாரிக்கவுள்ளதாக சிறுநீரக கடத்தல் சம்பவம் தொடர்பில் கண்டறிவதற்கு நியமிக்கப்பட்ட ஐவர் அடங்கிய குழுவின் தலைவர் டாக்டர் ஜயசுந்தர பண்டார தெரிவித்துள்ளார். 

தனியார் வைத்தியசாலைகள், ஐந்திலேயே இந்த சிறுநீரக மோசடிகள் இடம்பெற்றுள்ளதாகவும் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவுக்கு நேற்று வெள்ளிக்கிழமை (05) கருத்து தெரிவிக்கும் போது அவர் தெரிவித்துள்ளார்.

சிறுநீரக கடத்தல் சம்பவம் தொடர்பில் கண்டறிவதற்கு நியமிக்கப்பட்ட ஐவர் அடங்கிய குழுவினரின் அறிக்கை, சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவுக்கு நேற்றுக் கையளிக்கப்பட்டது. 

இதன்போது கருத்து தெரிவித்த சுகாதார அமைச்சர், சட்டவிரோத சிறுநீரக கடத்தல் சம்வம் தொடர்பில் மேலதிக நடவடிக்கைகளை குற்றப்புலனாய்வு திணைக்களத்தினூடாக முன்னெடுக்கவுள்ளதாகத் தெரிவித்தார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X