Kogilavani / 2015 நவம்பர் 27 , மு.ப. 06:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொழும்பு நகரிலும், அண்டிய பகுதிகளிலும் நேற்று வியாழக்கிழமை காலை 6 மணிமுதல் மாலை 4 மணிவரையும் கடுமையாக அமுல்படுத்தப்பட்ட போக்குவரத்துச் சட்டங்களை மீறிய 725 பேருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்படவுள்ளது என்று பொலிஸ் தலைமை அலுவலகம் அறிவித்துள்ளது.
வீதிப் போக்குவரத்துச் சட்டங்களையும், ஒழுங்குகளையும் பின்பற்றாது வாகன சாரதிகள் மற்றும் பாதசாரி கடவையில் அல்லது ஏனைய இடங்களில் வீதிகளைக் கடக்கும் பாதசாரிகளுக்கு எதிராக வழக்குத் தொடர்வதற்கு தீர்மானித்துள்ளதாக, பொலிஸ் தலைமையக போக்குவரத்துப் பிரிவு ஏற்கெனவே அறிவித்திருந்தது.
இந்நிலையில், போக்குவரத்துச் சட்டங்களையும் ஒழுங்குகளையும் மீறிய சாரதிகள் மற்றும் மோட்டார் சைக்கிள்களைச் செலுத்தியோருக்கு எதிராகவே வழக்குத் தாக்கல் செய்யப்படவுள்ளது என்றும் அந்த அலுவலகம் அறிவித்துள்ளது.
3 hours ago
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago
5 hours ago