2025 ஓகஸ்ட் 27, புதன்கிழமை

சில்லறை திருடன் பாதணிகளுடன் மாயம்

Kanagaraj   / 2015 நவம்பர் 30 , மு.ப. 02:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

சில்லறைகளைத் திருடுவதில் கைதேர்ந்த திருடன் ஒருவன், பாதணிக் கடையில் தன்னுடைய பழைய செருப்புகளைக் கழற்றிவைத்துவிட்டு, புதிய பாதணிகளை அணிந்துசென்றுள்ள சம்பவமொன்று, பிலியந்தலை பகுதியில் இடம்பெற்றுள்ளது.

குறித்த நபர், பிலியந்தலை நகரத்தில் மதுபானசாலை, கண்ணாடிப்பொருட்கள் விற்பனை செய்யும் கடை மற்றும் பாதணி விற்பனை நிலையம் என்பவற்றில் இருந்த சுமார் 50,000 ரூபாய் பெறுமதியான நாணயக் குற்றிகளை திருடிச்சென்றுள்ளார்.பாதணி கடைக்குள் நுழைந்த அவர்,  தனது பழைய செருப்புகளை கழற்றி வைத்துவிட்டு புதிய சப்பாத்துக்களை அணிந்து சென்றுவிட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

குறித்த நபர், மதுபான சாலையில் மதுபானம் அருந்தாவிட்டாலும் இரண்டு போத்தல்களை பையொன்றில் போட்டு வைத்து, அதனை மறந்துவிட்டு சென்றதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X