2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

சாவி வெட்டியவர் கைதாகினார்

Gavitha   / 2016 பெப்ரவரி 08 , மு.ப. 03:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

சாவி வெட்டும் ஒருவரை சந்தேகத்தின் பேரில் கைதுசெய்தமையால், ஒருவரின் உயிரைக் காப்பாற்ற முடிந்ததாக பொலிஸ் ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, நுகேகொடை, தெல்கந்த சந்தியில் வைத்து கைவிலங்குச் சோடியுடன், சாவிகளை வெட்டும் ஒருவரை, பொலிஸார் கைதுசெய்துள்ளனர். ற்றுக்கொள்ளப்பட்ட தகவல்களின் அடிப்படையில், வெல்லம்பிட்டிய  பகுதியில் உள்ள பாதாள உலககோஷ்டியைச் சேர்ந்த இருவரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

பாதாள உலகக் கோஷ்டிக்கு எதிரான நபர்களை, கைவிலங்கிட்டு கொலை செய்யத் திட்டமிட்டிருந்தமை,இதனூடாக அம்பலமாகியது என்றும், போலியான சாவியை வெட்டிக் கொள்வதற்கே, சாவி வெட்டுபவரிடம், இந்த கைவிலங்கு கையளிக்கப்பட்டுள்ளதாக விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது என்று தெரிவித்த பொலிஸார்
சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்துவருவதாகவும் தெரிவித்தனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X