2024 மே 15, புதன்கிழமை

சக மாணவனை நிலத்தில் அடித்த மாணவனுக்கு விளக்கமறியல்

Editorial   / 2018 டிசெம்பர் 05 , மு.ப. 09:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பில் அமைந்துள்ள தனியார்பாடசாலையொன்றில், சாதாரண விளையாட்டு ஒன்றின் போது இரு மாணவர்களுக்கிடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கமானது முற்றிய நிலையில் சக மாணவன் மீது கதிரையை எறிந்து, குறித்த மாணவனை  நிலத்தில் தூக்கி அடித்த மாணவனை எதிர்வரும் 10ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் இசுரு நெத்திகுமார நேற்று (4) உத்தரவிட்டுள்ளார்.

குறித்த தாக்குதலில் காயமடைந்த 19 வயது மாணவனின் முதுகெலும்பு உடைந்திருக்குமாயின் அது விலை மதிப்பிட முடியாதென தெரிவித்த நீதிவான் , சந்தேகநபரான மாணவனை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் காயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வரும் மாணவனின் முதுகெலும்பு உடைந்துள்ளதா என்பது தொடர்பில், வைத்திய பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பம்பலப்பிட்டி பொலிஸார் நீதிமன்றுக்கு அறிவித்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .