Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 05, சனிக்கிழமை
Kamal / 2019 டிசெம்பர் 21 , பி.ப. 01:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாட்டிலுள்ள சகோதர மொழிகளை அறியாதிருப்பது வெட்கப்பட வேண்டிய காரணம் எனத் தெரிக்கும் கல்வி அமைச்சர் டலஸ் அலஹப்பெரும, கல்வித்திட்டத்தில் மாற்றம் செய்ய வேண்டியது அவசியமெனவும் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் வாழும் 21 மில்லியன் மக்கள் பயன்படுத்துதற்காக இரு மொழிகள் மாத்திரமே உள்ள நிலையில் அவற்றை சரிவர அறியாதிருப்பது வெட்கத்துகுரிய காரணமெனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கல்வி அமைச்சில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு மேலும் கருத்து தெரிவித்த அவர்,
அபிவிருத்தி அடைந்த நாடுகள் தேசமாக ஒன்றிணைந்தன் காரணமாகவே அவர்களின் இலக்குகளை இலகுவாக அடைந்துகொள்வதாகவும், 45 இலட்சத்துக்கும் அதிகமான சிறுவர்களை திறமையானரவர்கள் திறமையற்றவர்கள் என்று பிரிக்காமல் சகலரும் நாட்டின் வளங்கள் என்று கருதப்பட வேண்டியது அவசியமெனவும் தெரிவித்துள்ளார்.
அதேநேரம் மொழிக் கையாளுகையின் போது இன ரீதியான வெறுப்புப் பேச்சுகளுக்கு இடமளிக்க தயாரில்லை எனத் தெரிவித்த அவர், சிங்கள மாணவர்களுக்கு தமிழ் மொழியையும், தமிழ் மாணவர்களுக்கு சிங்கள மொழியையும் கற்பிக்க வேண்டியது அவசியமெனவும் வலியுறுத்தியுள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
59 minute ago
1 hours ago
4 hours ago