2025 ஓகஸ்ட் 13, புதன்கிழமை

சங்குகளை கடத்த முற்பட்ட தொழிலதிபர் கைது

Niroshini   / 2016 ஒக்டோபர் 14 , மு.ப. 11:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

சட்டவிரோதமான முறையில் மட்டி மற்றும் சங்குகளை, இந்தியாவின் திருவானந்தபுரம் பகுதிக்கு கடத்த முற்பட்ட கண்டியைச் சேர்ந்த 44 வயது மிக்க தொழிலதிபர் ஒருவர், இன்று காலை 7.45மணிக்கு, கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து, சுங்கத் திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.  

கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து, 365 சங்குகள், சிப்பிகள் கைப்பற்றப்பட்டன.

குறித்த நபர், ஸ்ரீ லங்கன் எயார் லைன்ஸ் விமானத்தில் பயணிக்கவிருந்த நிலையில், சுங்கத் திணைக்கள  அதிகாரிகளால் சோதனைக்கு உட்படுத்தப்பட்டார். இதன்போது, 60 சங்குகளும் 305 மட்டிகளும் கைப்பற்றப்பட்டன.

இவை,  தங்காலை மற்றும் அதனை அண்டிய பகுதிகளிலுள்ள கடற்பரப்பில் இருந்து எடுக்கப்பட்டவை என தெரியவந்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .