2025 ஓகஸ்ட் 12, செவ்வாய்க்கிழமை

சுங்கத்துக்கு டிமிக்கி கொடுத்து தங்கம் கடத்திய ஆசாமி கைது

Janu   / 2025 ஓகஸ்ட் 12 , மு.ப. 09:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுமார் 11 ரூபாய் கோடிக்கும் அதிகமான மதிப்புள்ள தங்க பிஸ்கட்களுடன் ஒருவர் குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதன்போது  1 கிலோ 2.66 கிராம் தங்க பிஸ்கட்டுகள் கைப்பற்றப்பட்டதாக   கூறப்படுகிறது.

டுபாயிலிருந்து வாகன உதிரி பாகங்களை இறக்குமதி செய்யும் போர்வையில் அவை நாட்டிற்கு கொண்டு வரப்பட்டதாக குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர்.

வாகன உதிரி பாகங்களுக்கு விதிக்கப்பட்ட வரியை சுங்க அதிகாரிகளுக்கு செலுத்திவிட்டு திரும்பி வந்தபோது, சந்தேகத்தின் பேரில் குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் அவர் கைது செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

கைது செய்யப்பட்ட நபர் சிலாபத்தில் வசிக்கும் 58 வயதுடையவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .