2025 ஓகஸ்ட் 12, செவ்வாய்க்கிழமை

சஜித் கட்சியின் சிரேஷ்ட எம்.பிக்களுக்கு அமைச்சுப் பதவி

Freelancer   / 2022 ஓகஸ்ட் 28 , மு.ப. 09:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய மக்கள் சக்தியின் சிரேஷ்ட எம்.பி.க்கள் ஐவர் அமைச்சரவை அமைச்சர்களாக நியமிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

நல்லாட்சி அரசாங்கத்தில் பலமிக்க அமைச்சுப் பதவிகளை வகித்த இவர்கள், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விடுத்த அழைப்பை ஏற்று அமைச்சரவையில் இணையவுள்ளனர்.

சர்வகட்சி அரசாங்கத்துக்குப் பதிலாக அனைத்துக் கட்சிகளின் இணக்கப்பாட்டுடன் தேசிய அரசாங்கத்தை நிறுவுவதற்கு அரசாங்கம் தற்போது தயாராகி வருகின்றது.

இதன்படி, கட்சிகளாக இல்லாது தனிப்பட்ட எம்.பி.க்கள் என, பல கட்சிகளின் எம்.பி.க்கள் இணைந்து,  அமைச்சர் பதவிகளைப் பெற உள்ளனர்.

புதிய அமைச்சரவை இன்னும் சில தினங்களில் பதவியேற்கவுள்ளதாகவும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. (R)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .