Freelancer / 2023 ஏப்ரல் 24 , பி.ப. 05:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
பசறை மடுல்சீமையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மக்கள் கூட்டத்துக்கு வருகை தாராத எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ எனது மக்களிடம் மன்னிப்பு கோர வேண்டும் என்று தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினரும் இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளருமான வடிவேல் சுரேஷ், என் மக்களின் முடிவே என் தீர்க்கமான அடுத்த கட்ட அரசியல் நகர்வு என்றும் தெரிவித்தார்.
பசறை பிரதேச சபை மண்டபத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட போதே மேற்குறிப்பிட்ட விடயத்தைத் தெரிவித்த அவர் மேலும் தெரிவிக்கையில்,
“பசறை மடுல்சீமையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மக்கள் கூட்டத்துக்கு எதிர்க்கட்சித் தலைவர் வருகை தராமையானது மக்கள் மத்தியில் இன்றளவும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது
அதனைத் தொடர்ந்து ஐக்கிய மக்கள் சக்தியின் அனைத்து பதவிகளில் இருந்தும் நான் விலகி இருந்தேன். இவ்விடயம் தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் என் மக்களிடம் மன்னிப்பு கோர வேண்டும் என்பதில் நான் உறுதியாக உள்ளேன்
வரும் நாட்கள் அரசியல் களத்தில் பல புதிய மாற்றங்கள் ஏற்படுத்தும் நாட்களாகும். எதிர்வரும் காலங்களில் பாராளுமன்றத்தில் நடைபெறும் வாத விவாதங்களை அவதானித்து சர்வதேச நாணய நிதியத்துக்கு வாக்களிப்பது தொடர்பில் நான் ஆராய்வேன்.
எது எவ்வாறாக இருப்பினும் என் மக்களுக்கு எதிரான எந்த ஒரு சட்டத்துக்கும் நான் ஒத்துழைப்பு வழங்கப் போவதில்லை. பட்டம், பதவி, கட்சிகள், வண்ணங்கள் தேவையில்லை. என் மக்களின் தீர்மானமே என் அடுத்த கட்ட அரசியல் நகர்வின் தீர்க்கமான முடிவாக அமையும்” என்றார்.
47 minute ago
53 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
47 minute ago
53 minute ago
1 hours ago
2 hours ago